கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குனருக்கு கொலை மிரட்டல் கடிதம்: போலீசார் தீவிர விசாரணை
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் சுந்தருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது என டி.ஐ.ஜி. சுமித் சரண் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் ரஷ்ய அரசு உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாக இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அணு மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டங்களும் அவ்வப்போது நடந்தன.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அணு மின் நிலைய வளாக இயக்குனர் சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து மர்ம கடிதம் வந்தது. இது குறித்து கூடங்குளம் போலீசார் விசாரித்து வழக்குப் பதிவு செய்தனர். மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என விசாரணை நடக்கிறது. இதன் எதிரொலியாக அணு மின் நிலைய மெயின் கேட், செட்டிகுளம் டவுன்ஷிப்பிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இது குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனருக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. திருக்குறுங்குடி அருகே முறைகேடாக வேட்டையில் ஈடுபட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை தேடி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications