அவதூறு வழக்கு வாபஸ்: நாஞ்சில் சம்பத் விடுதலையானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து நாஞ்சில் சம்பத் விடுதலையானர்.

நாஞ்சில் சம்பத் ம.தி.மு.க.,வில் கொள்கை பரப்புச் செயலராக, பதவி வகித்தபோது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதிமுகவில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். அக்கட்சியில் கொள்கை பரப்பு துணைச் செயலராக, நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, 2003ம் ஆண்டு, நாஞ்சில் சம்பத் மீது தொடரப் பட்டிருந்த, மூன்று அவதூறு வழக்குகளை, வாபஸ் பெற, சென்னை, செஷன்ஸ் கோர்ட்டுகளில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில், சென்னை, வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக தொடரப்பட்டிருந்த, அவதூறு வழக்கை வாபஸ் பெற, அனுமதி கோரி, தாக்கல் செய்த மனு, செவ்வாய்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நான்காவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற பொறுப்பு, நீதிபதி மீனா சதீஷ், வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்வதாக, உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+