காதலுக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவனுடன் 'எஸ்' ஆன நர்சரி ஸ்கூல் 'மிஸ்'!
கொடைக்கானல்: மதுரையை சேர்ந்த நர்சரிப்பள்ளி ஆசிரியை ஒருவர் கல்லூரி மாணவருடன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை இந்திரா நகரில் வசிப்பவர் அந்தோணிசாமி. இவரது மகள் ஜெனிபர் வயது 18. இவர் நர்சரி பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை . தனது மகளை கடத்தி கட்டாய திருமணம் செய்திருக்கலாம் என்றும் மீட்டுத்தரவேண்டும் என்றும் அந்தோணிசாமி மதுரை தல்லாக்குளம் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
இதனையடுத்து தல்லாக்குளம் போலீசார் அனைத்து ஸ்டேஷன்களுக்கும் பெண்ணின் படத்தை அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் கொடைக்கானல் ஏரி பகுதியில் ஒருவருடன் இருப்பது தெரிந்தது.
அங்கு சென்ற போலீசார், இருவரிடமும் விசாரணை செய்ததில், அந்த வாலிபர் மதுரை சிந்தாமணி ரோடு பகுதியில் வசிக்கும் அருள் பிரகாசத்தின் மகன் ஆண்ட்ரூஸ்ஜோன்ஸ்,19, என்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. தங்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வீட்டை விட்டு கொடைக்கானலுக்கு ஓடி வந்துவிட்டதாக கூறினர்.
இதனையடுத்து கொடைக்கானல் போலீசார், இருவரின் பெற்றோர்களையும் அங்கு வரவழைத்தனர். ஸ்டேஷன் வாசலில் காதலர்களின் பெற்றோர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், தல்லாகுளம் போலீசார் முன்னிலையில் காதலர்களை ஒப்படைத்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications