அமெரிக்கா: ரூ.5 கோடி லாட்டரி வென்ற இந்தியர் சயனைட் விஷம் கொடுத்து கொலை

Subscribe to Oneindia Tamil

Urooj Khan
சிகாகோ: அமெரிக்காவில் லாட்டரியில் ரூ. 5 கோடி வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் அந்தப் பணத்தைப் பெற இருந்த நிலையில் சயனைட் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

1980ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறிய உரூஜ் கான் (46) என்பவர் சிகாகோவில் ஒரு சலவை நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் தானே தனியாக 5 சலவையகங்களைத் திறந்தார்.

கடந்த ஜூன் மாதம் சிகாகோவில் உள்ள 7-Eleven convenience store கடைக்குச் சென்றவர், 30 டாலர் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கினார். அதை உடனே ஸ்கார்ட்ச் செய்தும் பார்த்தபோது அவரது எண்ணுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்தது.

இதையடுத்து ஜூலை 19ம் தேதி அவருக்கான செக் அனுப்பப்பட்டது. ஆனால், 20ம் தேதி அவர் இறந்து கிடந்தார். இது சாதாரண மரணம் என்று கருதப்பட்டு அவரது உடல் புதைக்கப்பட்டுவிட்டது.

ஆனால், இவரது செக்கை அவரது வீட்டைச் சேர்ந்த யாரோ கணக்கில் போட்டு பணமாக மாற்றியும் விட்டனர். இந் நிலையில் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாருக்கு அவரது உறவினர் புகார் அனுப்பினார்.

இதையடுத்து அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டபோது, அவர் சயனைட் விஷம் தந்து கொலை செய்யப்பட்டது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+