பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும்- வர்மா குழுவிடம் மனு கொடுத்த என்.ஜி.ஓ
டெல்லி: பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று வர்மா குழுவிடம் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மனு கொடுத்துள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்ததையடுத்து, பலாத்கார சட்டத்தை கடுமையாக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைகளை யார் வேண்டுமானாலும் அக்குழுவுக்கு அனுப்பலாம் என அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து பாரதிய பதிதா உத்தார் சபா, வர்மா குழுவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் 'பலாத்காரத்தால் மாணவி உயிரிழந்தது வருந்தத்தக்கது. பாலியல் தொழிலை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்காதது பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்தத் தருணத்தில் இந்தத் தொழிலை அங்கீகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ஏற்கெனவே 164 நாடுகளில் பாலியல் தொழில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications