தருமபுரி சம்பவம்: ரூ7.32 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தருமபுரியில் நடந்த சாதி வெறி தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.7.32 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 7-ந் தேதி நடைபெற்ற ஒரு காதல் திருமணத்தைத் தொடர்ந்து 3 கிராமங்களில் உள்ள 326 வீடுகளை சாதி வெறியர்கள் திட்டம்போட்டு சூறையாடினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குரைஞர் செங்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தருமபுரி வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கோரியிருந்தார்.
செங்கொடியின் மனுவை நீதிபதிகள் எலிபி தர்மாராவ், அருணா ஜெகதீசன் ஆகியோர் விசாரித்தனர். இந்த விசாரணையின் முடிவில், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் மதிப்பிட்டதன் அடிப்படையில் 326 குடும்பங்களுக்கு ரூ.7.32 கோடியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இடைக்கால நிவாரணமாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது,
மேலும் கலெக்டர் தவிர மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைக்கப்பட்டு 2 வாரத்துக்குள் இடைக்கால நிவாரணத் தொகையை 326 குடும்பங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 4ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications