ரயில் கட்டண உயர்வை குறை கூறும் ஜெயலலிதா முதலில் பஸ் கட்டணத்தை குறைக்கட்டும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா அரசு மட்டும் பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம், மத்திய அரசு மட்டும் ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாதா? தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சொல்லியிருப்பதைப்போல தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தைவிட ரயில் கட்டணம் குறைவு தான் என்று திமுக கருணாநிதி கூறினார்.

அவர் அளித்த பேட்டி,

கேள்வி: ரயில் கட்டணம் உயர்த்தியதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?

பதில்: தமிழகத்திலே பேருந்து கட்டணத்தை அதிக அளவிற்கு இந்த அரசினர் உயர்த்தியிருக்கிறார்களே, அதை முதலில் திரும்பப் பெறச் சொல்லுங்கள். அதற்குப் பிறகு மத்திய அரசு உயர்த்தியதைப் பற்றி இவர்கள் பேசட்டும்.

கேள்வி: மத்திய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப் போக்காகச் செயல்படுகிறதே, உதாரணமாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை, டீசல் விலை, தற்போது ரயில் கட்டண உயர்வு என்றெல்லாம் நடுத்தர மக்களைப் பாதிக்கின்ற செயலில் ஈடுபடுகிறதே, இதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்துமா?

பதில்: மத்திய அரசின் இத்தகைய செயல்களைக் கண்டித்து அறிக்கை கொடுக்கிறோம், கண்டித்து கடிதம் எழுதுகிறோம், திரும்பப் பெறச் சொல்லிக் கேட்கிறோம்.

கேள்வி: காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று நேற்றைய தினம் சொல்லி விட்டார்களே?

பதில்: காவிரி பிரச்சனை பற்றி கர்நாடக அரசின் சார்பில் அவர்களுடைய நிலைமைகளை விளக்கியிருக்கிறார்கள். அவர்களிடமும் தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள். அது உண்மையா அல்லவா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய வேலை, மத்திய அரசுக்கு இருக்கிறது. அவர்கள் அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோருகிறேன்.

கேள்வி: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், ரயில் கட்டணங்களை உயர்த்தாமல் எப்படி கட்டமைப்புகளை சீர் செய்ய முடியும், வேறு என்ன செய்ய முடியும் என்று மாற்று யோசனை சொல்லுங்கள் என்று அறிக்கை கொடுத்திருக்கிறாரே?

பதில்: அவர் சொல்வதைத் தான் நானும் சொல்கிறேன்.

கேள்வி: ரயில் கட்டண உயர்வுக்கு நீங்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறீர்கள் அல்லவா?

பதில்: நான் கண்டனம் தெரிவிக்கவில்லை. நீங்களாக கண்டனம் என்று சொல்கிறீர்கள். கண்டனம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தலாம், மத்திய அரசு மட்டும் ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாதா? தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் சொல்லியிருப்பதைப்போல தமிழ்நாட்டில் உள்ள பேருந்து கட்டணத்தைவிட ரயில் கட்டணம் குறைவு தான்.

கேள்வி: நடுத்தர மக்கள் ரயிலைத்தான் பயன்படுத்துகிறார்கள். அந்தக் கட்டணத்தை உயர்த்துவதை சரி என்று சொல்கிறீர்களே?

பதில்: நான் சரி என்று சொல்லவில்லை. ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய எந்த கட்டண உயர்வையும் திமுக ஆதரிக்காது என்று தான் சொல்லியிருக்கிறேன்.

கேள்வி: டாக்டர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அதை நல்ல முறையில் கவனித்தார் என்று உங்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுத்திருக்கிறாரே?

பதில்: "நோ கமெண்ட்ஸ்" என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+