கள்ளக்காதல்- நர்ஸ் தற்கொலை: பெண் டாக்டர் கணவருடன் தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

குமரி: கள்ளக்காதல் தொடர்பாக நர்ஸ் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது கள்ளக்காதலன் தனது டாக்டர் மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார்.

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஒட்டலிவிளையைச் சேர்ந்தவர் கண்ணன். மினி பஸ் கன்டக்டர். குலசேகரம் அருகே உள்ள மணவிளையைச் சேர்ந்தவர் நர்ஸ் சுபா ஜாஸ்மின். அழகிய மண்டபத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தினசரி மினி பஸ்ஸில் சென்று வந்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

சுபா ஜாஸ்மின் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலன் கண்ணனை கைபிடித்தார். தற்போது அவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கன்டக்டரான கண்ணன் தற்போது வேர்கிளம்பி பஞ்சாயத்து தலைவராகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸ் வேலைக்கு சேர்ந்தார் சுபா. அப்போது வேர்கிளம்பியை அடுத்த மணக்காவிளையைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவரை சந்தித்தார். அது பின்னர் கள்ளக்காதலாக மாறியது.

இதனை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டது. இதையடுத்து அந்த என்ஜினியர் மணக்காவிளையில் தனது டாக்டர் மனைவி நடத்துகின்ற ஹோமியோபதி மருத்துவமனையில் அவருக்கு நர்ஸ் வேலை வாங்கிக் கொடுத்தார். கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததும் பெண் டாக்டர் சுபாவை வேலையில் இருந்து நீக்கிவிட்டார். சுபா திருந்தி வாழ விரும்பியுள்ளார்.

எனவே, என்ஜினியரிடம் பிடி கொடுக்காமல் பேசி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த என்ஜினியர் நான் சொல்கிறபடி கேள், இல்லை என்றால் நாம் ஒன்றாக இருந்த படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் சுபா தற்கொலை செய்தார்.

இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்த என்ஜினியர் மற்றும் அவரது மனைவியான பெண் டாக்டரிடம் விசாரணை நடத்த அவர்களது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் அங்கு இல்லை. தொடர்ந்து மருத்துவமனைக்கு போலீசார் சென்றனர். ஆனால் ஊழியர்கள் டாக்டர் அங்கு வரவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து கணவனையும், மனைவியையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+