விவேகானந்தர் 150 வது பிறந்தநாள்: அழகிய பெண்ணை அன்னையே என்று அழைத்த துறவி

1863 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 12 ஆம் நாள் கல்கத்தாவில், விஸ்வநாத் ததா - புவனேசுவரி தேவி தம்பதியினருக்கு மகவாகத் தோன்றினார் சுவாமி விவேகானந்தர். இளம் வயதிலேயே அவருக்கு தேடலும், ஞான வேட்கையும் இருந்தது. அது குருதேவரின் ராமகிருஷ்ணர் பால் அவரைச் செலுத்தியது. குருவைப் பலமுறை ஆய்ந்து பின்னர் தனது குருவாக ஏற்றுக் கொண்ட சுவாமி விவேகானந்தர் உலகம் முழுவதும் அவரது பெருமையைப் பரப்பினார்.
இந்தியா முழுதும் பயணம் செய்து மக்கள் படும் துயரங்களைக் கண்டு மனம் வாடினார். அவர்கள் தம் குறையைப் போக்குவதே தமது முதற் கடமை என்று முடிவு செய்து அதற்காகவே உழைத்தார். அந்தப் பயணத்தில் அவருக்கு பல்வேறு அனுபவங்கள் வாய்த்தன.
அன்னையே என்று அழைத்தவர்
ஒருமுறை விவேகானந்தர் மேடையில் பேசிவிட்டு இறங்கி வந்தார்.
அவருடைய பேச்சில் வசீகரிக்கப்பட்ட அழகிய இளம் பெண் அவரின் அருகில் வந்தாள். நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள் அந்தப் பெண்.
என்னைப் பார்த்த உடன் ஏன் இந்த எண்ணம் வந்தது?என்று கேட்டார் ஸ்வாமிஜி.
அதற்கு அந்தப் பெண், உங்களைப் போல ஞானமும், ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான் உங்களை திருமணம் செய்து செய்து கொள்ள நினைக்கிறேன் என்று கூறினாள்.
அதற்கு கொஞ்சம் கூட அசரவில்லை விவேகானந்தர். என்னை மணந்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொள்ளேன் என்று கூறினார் அவர். சொன்னதோடு மட்டுமல்லாது இன்றுமுதல் உன்னை ‘தாயே' என்று நான் அழைக்கிறேன் என்று கூறினார்.
ஒருவரது எண்ணத்தை மறுக்கும் போது கூட அவரது மனதை காயப்படுத்தாமல் மாறாக அவரை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் விவேகானந்தரின் உயர்ந்த பண்பாகும்.
வீரத்துறவி விவேகானந்தர்
எத்தனையோ துறவிகள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களில் வீரத்துறவி என்றழைக்கப்படுபவர் விவேகானந்தர் மட்டுமே. உடல், சொல், செயல் அத்தனையிலும் சமுதாயத்துக்காக வாழ்ந்துகாட்டி இன்றும் இளைஞர்களிடையே வீரமகானாக திகழ்ந்துகொண்டிருப்பவர் விவேகானந்தர் என்றார் மிகையாகாது.
இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும் என்றவர்.
நாடுமுழுவதும் கொண்டாட்டம்
அத்தகைய வீரத்துறவியின் பிறந்த தினம் இன்றைக்கு நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் விவேகானந்தரைப்போல வேடமணிந்து அவரது கொள்ளைகளை நினைவு கூர்ந்தனர்.
திருப்பூரில் கடந்த 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஒருவார காலம் விவேகானந்தர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தினந்தோறும் விவேகானந்தரைப் பற்றிய சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.
விவேகானந்தர் வாழ்ந்தது வெறும் 39 ஆண்டுகளேயாயினும் இந்த வீரத்துரவியின் ஆற்றல்மிகுந்த சமுதாயப் பணிகள் மிகப்பரந்தன. சுவாமியின் பிறந்தநாளில் அவரது வழிமொழிக்கு ஏற்ப இளைஞர்கள் வழிநடப்பதே அவருக்கு செய்யும் மரியாதையாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications