12 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்த சமையல்காரர் கைது
ஐதராபாத்: ஆந்திராவில் 12 வயது சிறுமியை மிரட்டி நான்கு மாதகாலமாக பாலியல் பலாத்காரம் செய்த சமையல்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான சமையல்காரரின் பெயர் சீதாராம் வயது 58. சென்னையை சேர்ந்த இவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் சென்ற அவர் வாராசி கூடா என்ற இடத்தில் வாடகைக்கு அறை எடுத்து தனியாக வசித்து வருகிறார். இவர் பல இடங்களுக்கு சென்று சமையல் வேலை செய்து வருகிறார்.
இவரிடம் சீதாவல்மண்டி பகுதியைச் சேர்ந்த ஏழை குடும்பத்தினர் சமையல் பணி உதவியாளராக இருந்தனர். சீதாராம் சமையல் பணிக்கு செல்லும்போது இந்த குடும்பத்தினரை அழைத்து செல்வார். அப்போது அந்த குடும்பத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் செலவுக்கு பணம் கொடுத்து இதனை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். இப்படி 4 மாதமாக சீதாராம் அந்த மைனர் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் மைனர் பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. நீண்ட நாட்களாகியும் குண மாகாததால் அவளை ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தேகம் அடைந்து அவளிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சீதாராம் மிரட்டி கற்பழித்து வந்ததை சிறுமி கூறினாள். இதையடுத்து தலைமறைவான சீதாராமை சில்ககுடா போலீசார் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications