போலீஸ் ஸ்டேசனில் தூங்கிய இன்ஸ்பெக்டர்… எஸ் ஆன வடமாநில கொள்ளையர்கள்

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் தனியார் டெக்ஸ்டைல்மில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதனை ஈரோடைச் சேர்ந்த சுந்தரராமசாமி என்பவர் செய்து வருகிறார். கடந்த 6 மாதகாலமாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொழிலாளர்களுக்கு திருப்பாச்சேத்தி அருகில் உள்ள பச்சோரி கிராமத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்து விநியோகிப்பது வழக்கம். சுந்தர ராமசாமியிடம் பணிபுரியும் சிவப்பிரகாசம், துளசிமணி ஆகிய இருவரும் வழக்கம் போல 6 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வந்துள்ளனர்.
மதியம் 2 மணியளவில் அவர்களை 5பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. அப்போது இருவரும் சத்தம் போடவே ஒருவன் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டான். இரண்டு பேரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். நேற்றிரவு ஒருவனை போலீசார் பிடித்தனர். பணத்துடன் தப்பியோடியவனையும் மற்றொருவனையும் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மூன்று பேரையும் திருப்பாச்சேத்தி போலீஸ் லாக் அப்பில் அடைத்துவிட்டு ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை 7 மணியளவில் கொள்ளையர்கள் இரண்டு பேர் டீ வாங்கித்தருமாறு கேட்டுள்ளனர். ஸ்டேசனில் இருந்த ஏட்டு சக்ரவர்த்தி டீ வாங்கிக் கொடுத்துள்ளார். அவர் கதவை திறந்த உடன் உள்ளே இழுத்துப்போட்டு கொள்ளையர்கள் அடித்துள்ளனர். இதனையடுத்து சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற வந்த சவுந்தரராஜ் என்ற போலீசையும் கொள்ளையர்கள் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
அடிவாங்கி காயத்துடன் இருந்த போலீசாரை திருப்பாச்சேத்தி கிராம மக்கள் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் ஏட்டு சக்ரவர்த்தியின் கை முறிந்துவிட்டுதாக கூறப்படுகிறது.
தப்பியோடிய இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் பெயர் ரஞ்சன் பதான், சங்கர் ட்வைன் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications