தூக்கு தண்டனை கொடுப்பதாலேயே கற்பழிப்புகள் குறையாது: பூரி சங்கராச்சாரி கருத்து
Subscribe to Oneindia Tamil

மேற்கு வங்கத்தில் கங்காசாகர் மேளாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூக்கு தண்டனை வழங்குவதால் நாட்டில் பலாத்கார சம்பவங்கள் குறையும் என கூற முடியாது. பெண்களுக்கு இழைக்கப்படும் எந்தவொரு அவமரியாதையையும் ஏற்று கொள்ள முடியாது. அதை தாங்கி கொள்ளவும் முடியாது.
நாட்டின் முன்னேற்றமானது பெண்களுக்கு அதிகாரம் வழங்காமல் ஏற்படுவதில்லை. கல்வி, கலாசாரம் மற்றும் சமூக சிந்தனைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வேண்டும். சமுதாய சீரழிவை தடுக்க அரசாங்கம், அரசியல் தலைவர்கள் மற்றும் ஒவ்வொரு பொது ஜனமும் ஈடுபாட்டுடன் இந்த விசயத்தில் செயல்பட வேண்டும். பலாத்கார சம்பவங்கள் நாள்தோறும் அதிகரிக்கக் காரணமே நாளிதழ்கள், பொழுதுபோக்கு சேனல்கள் மற்றும் சினிமாதான் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications