ஜார்க்கண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி- ஆளுநர் பரிந்துரைத்தார்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் அரசுக்கான ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் சையத் முகமது பரிந்துரை செய்திருக்கிறார்.
பாரதிய ஜனதா - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசுக்கான ஆதரவை ஜார்க்கண்ட் மோர்ச்சா விலக்கிக் கொண்டதால் பாஜக, ஆட்சியைக் கலைக்க பரிந்துரை செய்தது. ஆனால் சிபுசோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவோ காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டது.
இதனால் ஆளுநரை நேரில் சந்தித்து இறுதி முடிவெடுப்பது தொடர்பான முடிவை தாமதிக்குமாறு கூறியிருந்தார். ஆனால் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதனால் வேறுவழியின்று நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications