தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப முடியாமல் விரக்தியில் பாக்.: லெப். ஜெனரல் பர்நாயக்
ஸ்ரீநகர்: இந்தியாவுக்குள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் தீவிரவாதிகளை அனுப்ப முடியாமல் விரக்தி மனநிலையில் இருக்கிறது என்றும் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் அப்பகுதியில் கொந்தளிப்பான நிலை நிலவுவதாகவும் வடபிராந்திய தளபதி லெப்.ஜெனரல் கே.டி. பர்நாயக் கூறியுள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நிலைமை பற்றி அவர் கூறுகையில், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வன்முறையை அதிகரித்து வருகிறது பாகிஸ்தான். தீவிரவாதிகளை அந்த ராணுவத்தால் இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முடியவில்லை. நமது ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தாலும் மிகவும் பொறுமையுடன் இருக்கின்றனர். அவர்களோ மிகவும் பிடிவாதமாக இருக்கின்றனர்.
ஊரி பகுதியில் நல்லா செக்டாரில் தொடர்ந்தும் தீவிரவாதிகளை ஊடுருவ வைக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அனைத்து வகைகளிலும் நாம் அதனைத் தடுத்து வருகிறோம். எந்தப் பகுதியில் நம்மை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதோ அங்கெல்லாம் பதிலடி கொடுக்கப்படும்.
இருநாட்டு பிரிகேடியர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் கூட பாகிஸ்தான் நேற்றும் 3 இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications