டிசிஎஸ் லாபம் ரூ.3,550 கோடியாக அதிகரிப்பு.. இந்த ஆண்டில் 60,000 பணியாளர்கள் சேர்ப்பு!

நாட்டின் மாபெரும் சாப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ் சந்தையில் நிலவிய யூகங்களை எலலாம் கடந்து அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அதன் லாபம் 26.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் 21.7 சதவீதம் அதிகரித்து ரூ. 16,070 கோடியை எட்டியுள்ளது. இதில் லாபமாக ரூ. 3,550 கோடியை ஈட்டியுள்ளது டிசிஎஸ்.
இந்த நிறுவனத்திலிருந்து பதவி விலகுவோர் எண்ணிக்கையும் 10 சதவீதத்துக்கும் குறைவாக குறைந்துள்ளது.
இந்த நிறுவனத்துக்கு ரூ. 500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஆர்டர்களை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் 14ல் இருந்து 16 ஆக உயர்ந்துள்ளது. இதன் மொத்த கிளையன்டுகளின் எண்ணிக்கை 1,051 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 1,001 ஆக இருந்தது.
இந் நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான என்.சந்திரசேகரன் அளித்துள்ள பேட்டியில், 2013 நிதியாண்டில் திட்டமிட்டபடி 60,000 ஊழியர்களை சேர்க்க டிசிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை புதிதாக 49,600 பேர் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனமும் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக லாபம் ஈட்டியுள்ளது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications