சென்னையில் கர்நாடக இசை கலைஞர்களின் 'கிரிக்கெட் கச்சேரி': 4 அணிகள் மோதல்

Subscribe to Oneindia Tamil

Cricket Kutcheri
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் கச்சேரி இன்று காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள புனித பீட்ஸ் பள்ளி மைதானத்தில் துவங்கியது.

கர்நாடக இசை கலைஞர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் டிசம்பர் மாதம் சபாக்களில் கச்சேரி செய்வதில் பிசியாக இருக்கும் அவர்களுக்கு ஜனவரி மாதம் கிரிக்கெட் கச்சேரி என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான போட்டி பொங்கல் பண்டிகை சிறப்பு போட்டியாக நடத்தப்படுகிறது. கிரிக்கெட் கச்சேரி சாந்தோமில் உள்ள புனித பீட்ஸ் பள்ளியின் கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டி.எம். கிருஷ்ணா, பி. உன்னிகிருஷ்ணன், கே. என். சசிகரண் மற்றும் வி.கே. மணிமாறன் ஆகியோர் தலைமையில் 4 அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் பங்கேற்றுள்ள இசை கலைஞர்கள் விவரம்,

என். ரவிகிரண், மன்னார்குடி ஈஸ்வரன், கடம் எஸ். கார்த்திக், பூங்குளம் சுப்பிரமணியம், பாலக்காடு ராம்பிரசாத், பி. சிவராமன், வி. சங்கரநாராயணன், என். குருபிரசாத், திருவனந்தபுரம் வி. பாலாஜி, பி.யூ. கணேஷ் பிரசாத், பி. சதீஷ் குமார், ஸ்ருதி சாகர், சந்திரசேகர சர்மா, மேலகாவேரி பாலஜி, சி.ஏ. ராஜசேகர், கே. எஸ். ரமணா, சாய் நரசிம்மன், அனிருத் ஆத்ரேயா, பிரதீப் குமார், எஸ். வரதராஜன். விவிஎஸ் முராரி, சிக்கில் குருசரண், ரித்விக் ராஜ், கே.வி. கோபாலகிருஷ்ணன், பிரசன்னா வெங்கட்ராமன், ஜே. ஸ்ரீராம், ராம்குமார் மோகன், ஸ்ரீவஞ்சியம் ஸ்ரீராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+