இந்திய மண்ணில் கண்ணிவெடிகளை புதைத்த பாகி்ஸ்தான்- ஆதாரங்களை வெளிட்டது ராணுவம்!

தொடரும் பதிலடியும் பலியும்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஜனவரி 6-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தந்த பதிலடியில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பின்னர் ஜனவரி 8-ந் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவி இரு இந்திய ராணுவ வீரர்களை மிகக் கோரமான முறையில் படுகொலை செய்தனர். மேலும் ஹேம்ராஜ் என்ற ராணுவ வீரரின் தலையை துண்டித்தும் எடுத்துச் சென்றனர். இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்த் இருநாடுகளிடையேயான உறவு விரிசலைடைந்து எல்லையில் மிகவும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பாகிஸ்தானுடனான சுமூக உறவு இல்லை என்றும் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் எச்சரித்திருந்தார். பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியத் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி நேற்று இரவு 8. 15 மணியளவில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானின் புதிய தாக்குதலுக்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் நேற்று இரவு 10 மணியளவில் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்த ஜனவரி மாதம் மட்டும் நடந்த மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
கண்ணிவெடிகள்
இதனிடையே எல்லைக் கட்ட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் வேலிகளை ஊடறுத்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி வருவது வாடிக்கையான ஒன்று. இதற்கானவே பல முறை இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இந்திய ராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்புவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறது பாகிஸ்தான். அண்மையில்கூட வேலிகளைத் தகர்க்க கண்ணிவெடிகளை தீவிரவாதிகள் உதவியுடன் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் புதைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இப்பொழுது இந்தியப் பகுதியிலேயே கண்ணிவெடிகளை பாகிஸ்தான் ராணுவம் புதைத்து வைத்திருப்பதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர் பதற்றம் உருவாக்கம்
இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஆசியக் கூட்டமைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி பேசுகையில், இந்திய பிரதமரின் கருத்துகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. நாங்கள் எந்தப் போர் பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த 60 ஆண்டு காலமாக எங்கள் நாட்டுக்கு வெளியில் இருந்து போர் பதற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதன் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 பேர் பலியானால் இந்தியப் பகுதியிலும் இருவர் பலியாகின்றனர். ஆனால் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டி போர் பதற்றத்தை உருவாக்குகின்றனர் என்றார் அவர்.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications