ஊழல் வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் சவுதாலா, மகன் மற்றும் 53 பேர் கைது!
சண்டிகர்: ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு என்ன?
ஹரியானா மாநிலத்தில் 1999-2000-ம் ஆண்டு 3 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்ததில் ஊழல் முறைகேடு நடைபெற்றதாக இந்திய தேசிய லோக் தள் தலைவரும் முன்னாள் ஹரியானா முதல்வருமான ஓம்பிரகாஷ் சவுதாலா ,அவரது மகன் அஜய் சவுதலா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை அம்மாநிலத்தின் ரோகினி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்குமான தண்டனை என்பது வரும் 22-ந் தேதி தெரியவரும். வரும் 17-ந் தேதி முதல் தண்டனை குறித்த விவாதம் நீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.
மொத்தம் 62 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது. இதில் 6 பேர் விசாரணையின் போது இறந்துவிட்டனர். ஒருவர் மீதான குற்றம் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா கைது செய்யப்பட்டார். அரியானா முன்னாள் முதல்வருடன் அவரது மகன் அஜய் சவுதாலா இருவரையும் சிபிஐ கைது செய்தது. ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆசியிரியர் நியமன ஊழல் வழக்கில் தொடர்புடைய மேலும் 53 பெரும் கைது செய்யப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications