ராணுவ வீரர்கள் கொலையில் உரிய நடவடிக்கை தேவை- பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் மத்திய அரசின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ஜம்மு பிராந்தியத்தின் மெந்தார் பகுதியில் இரண்டு இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவமும், அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்ட சம்பவமும் கடுமையான கண்டனத்துக்குரியது. இந்த ஆத்திரமூட்டும் செயல் கண்டனத்துக்குரியது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தவும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் பாகிஸ்தான் அரசை கேட்டுக்கொண்டோம்.
ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல், உடனடியாக இந்த வற்புறுத்தலை பாகிஸ்தானிடம் தெரிவித்தார். கடந்த திங்கள்கிழமையன்று நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின் போதும் இதே நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.இந்த பிரச்சினையை, இந்தியா மிகவும் உறுதிப்பாட்டுடன் அணுகி வருகிறது. மிகவும் சீரியசாக, தனது நிலையில் தீவிரமாக இருக்கிறது.
இதனால் இந்தக் கோரச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களை தண்டிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். அச்சம்பவத்தை அப்பட்டமாக மறுத்து கொண்டிருப்பதையோ உரிய முறையில் பதில் அளிக்காமல் இருப்பதையோ இந்தியா கண்டுகொள்ளாது என்றோ, இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படாது என்றோ வழக்கம்போல உறவு தொடரும் என்றோ பாகிஸ்தான் கருதக்கூடாது.
பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்கள், சர்வதேச நடத்தை நெறிமுறைகளை மீறிய செயல். இச்செயல்கள் ஆத்திரமூட்டுவதுமின்றி இந்தியாவுடனான உறவு சுமூக நிலைக்குத் திரும்புவதில் பாகிஸ்தானுக்கு அக்கறை இல்லை என்ற முடிவுக்கு கொண்டு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications