உ.பி.யில் நண்பரின் 6 வயது மகளை கற்பழிக்க முயன்று, கொன்ற வாலிபர்: மக்கள் ஆர்ப்பாட்டம்
காசியாபாத்: உத்தர பிரதேசத்தில் நண்பரின் 6 வயது மகளை கற்பழிக்க முயன்று அவளை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் ரவி சிங்(26). போதைப் பொருள் உட்கொள்ளும் பழக்கமுள்ளவர். அவரும், சுந்தர் என்பவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்துள்ளனர். சுந்தரின் மனைவி கடந்த 18 மாதங்களுக்கு முன்பு காசநோயால் இறந்தார். சுந்தரின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ரவி தினமும் அவரது வீட்டுக்கு செல்வார்.
அப்போது சுந்தரின் 6 வயது மகளுக்கு தினமும் இனிப்புகள் கொடுப்பார். கடந்த வாரம் சுந்தர் வீட்டுக்கு சென்ற ரவியிடம் சிறுமி இனிப்பு கேட்டுள்ளார். முதலில் கடைக்கு செல்ல மறுத்த சிங் பின்னர் சிறுமியை அழைத்துக் கொண்டு ஆள்நடமாட்டமில்லா இடத்திற்கு சென்றார். அங்கு அவர் சிறுமியை கற்பழிக்க முயன்றார். ஆனால் சிறுமி கூச்சல் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அருகில் கிடந்த செங்கலை எடுத்து சிறுமியின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
தலையில் பலத்த காயமடைந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ரவி சிங்கை கைது செய்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து காசியாபாத்தின் சிஹானி கேட் பகுதியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications