ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நெருங்கும் தீர்ப்பு!

1991-96-ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.63 கோடி சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் 16 ஆண்டுகால இழுத்தடிப்புக்குப் பிறகு தற்போதுதான் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவிடம் 1,384, சசிகலாவிடம் 1,032, சுதாகரன் 914,இளவரசியிடம் 651 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஜெயலலிதாவும் சசிகலாவும் பல கேள்விகளுக்கு விளக்கமான பதில்களை அளித்திருக்கின்றனர். ஆனால் சுதாகரனும் இளவரசியும் பொதுவாக 'தெரியாது' என்ற பதிலையே வாக்குமூலமாகக் கொடுத்திருக்கின்றனர்.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரன் தனக்கு நடத்தப்பட்ட திருமணம் பற்றிய கேள்விக்கு கூட தெரியாது என்று பதிலளித்தார். இளவரசியோ, ஜெயலலிதாவின் புடவைகள், நகைகளில் தமது நகைகளும் உடைமைகளும் அடக்கம் என்று கூறியிருக்கிறார்.
இந்த வழக்கில் வரும் 21ம் தேதி சாட்சியங்களின் விசாரணை தொடங்குகிறது. சாட்சியங்களின் விசாரணையை விரைவாக நடத்தி மிக அதிகபட்சம் 6 மாதங்களில் தீர்ப்பளித்துவிட வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கிறாராம் நீதிபதி பாலகிருஷ்ணன்.
நீதிமன்ற வழக்கில் நிலையான இடம் பிடித்திருக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக நாடே காத்திருக்கிறது!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications