தேமுதிகவுடன் கூட்டணிக்கு ஸ்டாலின் ஆதரவு.. அதனாலேயே அழகிரி எதிர்ப்பு!

லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸ் அணியில் தேமுதிகவும் இடம்பெறும் வகையில் இரு கட்சிகளிடையே ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீது அவதூறு வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவிப்பதும் இதற்கு அந்த கட்சியினர் நன்றி தெரிவிப்பதும் என சிக்னல் கொடுக்கப்பட்டது. பின்னர் 'கலைஞர்' ஆட்சிக்காலத்தில் பெருந்தன்மையாக அவதூறு வழக்குகளே போடப்படவில்லை என்று விஜயகாந்த் பேசி நெருக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நெருக்கத்தில் தற்போது இடைவெளி "ஏற்படுத்தப்பட்டிருப்பதாக"வே கூறப்படுகிறது.
இந்த இடைவெளி ஏற்படுத்தப்பட்டது எப்படி? யாரால் ஏற்படுத்தப்பட்டது? வேறு யாருமல்ல சாட்சாத் மு.க. அழகிரிதான் என்கின்றனர் திமுகவினர். அழகிரி அப்படி என்னதான் செய்தார் என்றால் திமுக -தேமுதிக இடையே "இயல்பான" கூட்டணிக்கான சூழல் உருவாகிவரும் நிலையில், நாலைஞ்சு கேஸூக்கே ஓடி ஒழிகிறவர் கேப்டனா? என்று தேவையில்லாமல் விஜயகாந்தை கடுப்பேற்றியிருக்கிறார்.
இதற்கு முக்கியக் காரணம், விஜய்காந்துடனான கூட்டணியை ஸ்டாலின் தீவிரமாக ஆதரிப்பது தான் என்கிறார்கள். ஸ்டாலின் விரும்பும் ஒன்றை ஆதரிக்க அழகிரி விரும்பவில்லையாம்.
அழகிரியின் தாக்குதலை விஜயகாந்த் கூட கண்டுகொள்ளவில்லையாம். அதே நேரத்தில் திமுகவையே பிடிக்காத விஜயகாந்தின் மனைவி பிரேமலதாதான் இதுக்குத்தான் திமுக கூட்டணியே வேண்டாம் என்று வீட்டுக்காரரிடம் பொங்கியிருக்கிறார்.
இந்த பொங்கிய கோபத்தின் விளைவுதான் தஞ்சாவூரில், 'எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை" என்ற கேப்டனின் பேச்சு எனக் கூறப்படுகிறது. தஞ்சாவூருக்கு முன்பாக ஸ்ரீவில்லிப்புத்தூரில்தான் "கலைஞரின்" பெருந்தன்மை பற்றி விஜயகாந்த் சிலாகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லும் போது சென்னை- மதுரை விமானத்தில் அழகிரியும் விஜயகாந்தும் ஒன்றாகத்தான் வந்திருக்கின்றனர். ஆனால் விமானத்தில் பேசிக் கொள்ளாத இருவரும் ஏர்போர்ட் பேருந்தில் பேசிக் கொண்டனராம். இருப்பினும் அப்போதுகூட அழகிரியை திரும்பிக் கூட பார்க்கவில்லையாம் பிரேமலதா.
திமுக பக்கம் கேப்டன் எட்டிப் பார்த்துவிடக்கூடாது என்ற குழிபறிப்பில் உக்கிரம் காட்டுகிறாராம் அழகிரி!
-
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications