ஜெயலலிதாவின் 'ஜனதா சாப்பாடு' திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
சென்னை: சென்னையில் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விற்கும் 1,000 அரசு சிற்றுண்டி உணவகங்கள் திறக்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு சுகாதாரமான முறையில் சலுகை விலையில் தரமான உணவு வழங்க சென்னை மாநகராட்சி மூலம் 1,000 சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்படும் என்றும், முதற்கட்டமாக சென்னையில் நகரில் உள்ள ஒவ்வொரு வார்டிலும், ஒரு சிற்றுண்டி உணவகம் என்ற அடிப்படையில் 200 சிற்றுண்டி உணவகங்களை தொடங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த உணவகங்களில் ஒரு இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் இந்த உணவகங்களின் பணிகளை சென்னை மாநகராட்சியே கண்காணிப்பதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு வரவேற்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான திமுகவும் இடம் பெற்றுள்ள மத்திய அரசு பின்பற்றும் தவறான தாராளமய பொருளாதாரக் கொள்கை மற்றும் நடவடிக்கைகளின் விளைவாக காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளன. மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
இத்தகு நிலையில் தமிழக அரசின் இந்தத் திட்டம் ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் மற்றும் குடிசைப் பகுதிவாழ் மக்களுக்கு ஓரளவு பயன் தரும் திட்டமாகும்.
தமிழக அரசு அறிவித்துள்ளபடி, சென்னை நகரத்தில் 1,000 சிற்றுண்டி உணவகங்களை திறப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும், இந்தத் திட்டத்தை இதர மாநகராட்சிகள் மற்றும் அடித்தட்டு உழைப்பாளி மக்கள், பிழைப்புக்காக இடம் பெயர்ந்து வாழும் உழைப்பாளி மக்கள், குவியலாக வாழும் மற்ற நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications