ஸ்வீடனில் ரயிலை கடத்தி ஓட்டத் தெரியாமல் அபார்ட்மென்ட்ஸில் மோதிய பெண் துப்புரவு பணியாளர்
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் காலி ரயிலை கடத்தி ஓட்டத் தெரியாமல் 3 அடுக்கு குடியிருப்பு மீது மோதினார்.
ஸ்வீடனில் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் ஸ்டாக்ஹோம் புறநகர் பகுதி ரயிலை கடத்தி டிப்போவில் இருந்து சுமார் ஒரு மைல் ஓட்டத் தெரியாமல் ஓட்டியுள்ளார். இறுதியில் ரயில் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி 3 அடுக்குமாடி குடியிருப்பின் மீது மோதியது. இதில் அந்த குடியிருப்பு பலத்த சேதமடைந்தது. ரயிலை ஓட்டிய பெண்ணும் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த அந்த பெண்ணை கைது செய்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஸ்டாக்ஹோம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் கையில் சாவி எப்படி கிடைத்தது, அவருக்கு ரயிலை ஸ்டார்ட் செய்ய எவ்வாறு தெரிந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ரயில் மோதியபோது அந்த 3 அடுக்குமாடி குடியிருப்பில் 3 குடும்பங்கள் இருந்தன. அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாரும் காயமடையவில்லை.
இந்த சம்பவம் ஸ்டாக்ஹோம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"மாமா உன் பொண்ண கொடு..அட ஆமா சொல்லிபுடு" இனி செல்லாது! சொந்தத்துக்குள் திருமணத்திற்கு ஸ்வீடன் தடை! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications