டெல்லி மாணவியைவிட கொடூரமாக கற்பழிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ராஜஸ்தான் சிறுமி
ஜெய்பூர்: டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேரால் கற்பழிக்கப்பட்ட மாணவி போன்று 6 பேரால் சீரழிக்கப்பட்டு காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்ட சிறுமி ராஜஸ்தான் மருத்தவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி பேருந்து நிலையத்தில் இருந்து 6 பேரால் கடத்தி கற்பழிக்கப்பட்டார். அந்த கயவர்கள் சிறுமியை சீரழித்ததோடு மட்டுமல்லாமல் அவரின் குடல், மர்ம உறுப்புகளை பெரிதும் சேதப்படுத்தி அவரை ஊர் எல்லையில் போட்டுவிட்டு சென்றனர். அவரது மர்ம உறுப்புகளில் பலத்த சேதம் அடைந்ததால் அவருக்கு அங்கு மட்டும் 6 மேஜர் ஆபரேஷன்களும், 8 மைனர் ஆபரேஷன்களும் செய்யப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அவரை ஜெய்பூரில் உள்ள ஜேகே லான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது நிலையைப் பார்த்து மருத்துவர்களே பேரதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து டாக்டர் எல்.டி. அகர்வால் கூறுகையில், நாங்களும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம். அவரது நிலைமையைப் பார்த்து நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.
அந்த சிறுமிக்கு 6 அக்கா மற்றும் 1 அண்ணன் உள்ளனர். பீகார் மாநிலம் தர்பங்காவைச் சேர்ந்த அவரின் தந்தை இறந்தபிறகு தாயுடன் ராஜஸ்தானில் வந்து செட்டிலானார்கள். இந்த சம்பவம் குறித்து முதலில் போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர் என்று சிறுமியின் குடும்பத்தார் தெரிவித்தனர். அதன் பிறகு உள்ளூர் மக்கள் கண்டனப் பேரணி நடத்திய பிறகு தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்டை தொடர்பு கொண்ட பிறகே குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டாலும் அதில் 2 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதால் போலீசார் அவர்கள் மீது இறக்கம் காட்டுவதாக சிறுமியின் குடும்பத்தார் தெரிவித்தனர். மேலும் உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications