நண்பருக்கு சீட் கிடைக்காததால் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய கோவைக்காரர்
ஈரோடு: நண்பருக்கு இடம் கிடைக்காததால் 40 வயது நபர் ஒருவர் சென்னையில் இருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தினார்.
சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கிளம்பியது. ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் ரயில் நண்பகல் 12 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் அருகே இருக்கும் காவேரி பாலத்தில் செல்கையில் பயணி ஒருவர் திடீர் என்று அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தார். உடனே என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.
ரயில் பாலத்தில் நின்றதால் பயணிகள் பீதி அடைந்தனர். மேலும் அபாய சங்கிலியைப் பிடித்து இழுக்கப்பட்டதால் ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று பயணிகள் நினைத்தனர். இதற்கிடையே இது குறித்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுக்ககப்பட்டது. தகவல் கிடைத்த உடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய கோவையைச் சேர்ந்த அர்த்தனாரி(40) என்பவரை பிடித்து தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் அவர் கூறியதாவது,
நான் 5வது பெட்டியில் பயணம் செய்தேன். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எனது நண்பருக்கு இருக்கை கொடுக்காததால் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தேன் என்றார்.
அர்த்தனாரி தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார் என்று கூறப்படுகிறது. ரயில் பாலத்தில் நின்றுவிட்டதால் அதனைத் தொடர்ந்து வந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆனங்கூர் ரயில் நிலையத்திலும், சபரிமலைக்கு விடப்பட்ட சிறப்பு ரயில் மகுடஞ்சாவடி ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து அனைத்து ரயில்களும் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications