எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்திய, பாக். ராணுவ தலைமையகங்கள் ஒப்புதல்

கடந்த ஜனவரி 6-ந் தேதியன்று இந்திய நிலைகள் மீது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதலைத் தொடுத்தது. இதற்கு இந்தியா பதிலடி தந்தது. பின்னர் ஜனவரி 8-ந் தேதியன்று இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி இரு இந்திய ராணுவத்தினரைப் படுகொலை செய்ததுடன் ஒரு வீரரது தலையைத் துண்டித்து எடுத்துச் சென்றது பாகிஸ்தான். இதற்கும் இந்தியத் தரப்பில் பதிலடி தரப்பட்டது. மேலும் ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியத் தரப்பில் எச்சரிக்கைவிடப்பட்டும் பாகிஸ்தானின் அத்துமீறல் ஓயவில்லை. இந்த ஜனவரி மாதம் மட்டும் எல்லைப் பகுதி மோதலில் இருதரப்பிலுமாக மொத்தம் 5 பேர் பலியாகி இருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பாக பிரிகேடியர்கள் நிலையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தும் அது தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களான லெப். ஜெனரல் வினோத் பாட்டியா மற்றும் மேஜர் ஜெனரல் அஷாப் நதீம் இருவரும் நேற்று புதன்கிழமை காலை 10 மணியளவில் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 10 நிமிடம் நேரம் நீடித்த இப்பேச்சுவார்த்தையில் இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்க ஒப்புக் கொண்டனர்.
மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு தமது படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் தணியக் கூடும் எனத் தெரிகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications