பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் பாகிஸ்தானின் புரட்சிக் குரல் காத்ரி யார்?
இஸ்லாமபாத்: எகிப்து, ஏமன், லிபியா என பல நாடுகளை புரட்டிப் போட்ட மக்கள் புரட்சி இப்பொழுது பாகிஸ்தானில் மையம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இந்தப் புரட்சிப் போராட்டத்துக்கு 'சுழி' போட்டுத் தொடங்கியிருக்கிறார் மதகுரு தாஹிர் உல் காத்ரி.
பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து இஸ்லாமிய மதக் கல்வி கற்ற காத்ரி கனடா சென்று குடியுரிமை பெற்றிருந்தார். அண்மையில் இ கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் நாடாளுமன்றம் அருகே ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கில் கூடி ஆளும் அரசுக்கு எதிராக புரட்சிக் குரல் எழுப்பி வருகின்றனர். பிறநாடுகளில் புரட்சியின் மையப் புள்ளியாக இருந்த "தேர்தல் சீர்திருத்தம்"தான் காத்ரியின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
பாகிஸ்தானில் புரட்சிக்கு கால்கோள் விழா நடத்திட கிளம்பியிருக்கும் காத்ரியைப் பற்றிய ஒரு பார்வை

கனடா பயணம்
பாகிஸ்தானில் 1951-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி பிறந்தவர் தாஹிர் உல் காத்ரி. அவர் இஸ்லாமிய கல்வியைப் படித்தார். 2006-ம் ஆண்டு பாகிஸ்தானைவிட்டு வெளியேறிய காத்ரி அந்நாட்டு குடியுரிமையும் பெற்றார். பாகிஸ்தானில் தேர்தல் சீர்திருத்தம் தேவை என்பதுதான் காத்ரியின் நீண்டகால கோரிக்கை

முஷாரப்பின் ஆதரவாளர்
2002-ம் ஆண்டு பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி சார்பில் லாகூரில் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முஷாரப்பின் தீவிர ஆதரவாளராகவும் செயல்பட்டவர். தற்போதுகூட காத்ரியின் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக முஷாரப் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு
2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதியன்று பயங்கரவாதத்துக்கு எதிரான பட்வாவை பிறப்பித்தார் காத்ரி. பயங்கரவாதம் என்பது பயங்கரவாதமே...வன்முறை என்பதும் வன்முறையே.. இதை நியாயப்படுத்த முடியாது. இவற்றுக்கு இஸ்லாமிய கல்வி முறையில் இடமில்லை என்பதும் காத்ரியின் நிலைப்பாடு. உலகம் முழுவதும் இஸ்லாமிய கல்வியை பரப்பி வரும் அவர் தற்கொலைத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கக் கூடியவர்

இந்திய பயணம்
கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த காத்ரி, பட்வா என்ற தமது புத்தகத்தை வெளியீடு செய்தார். இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளும் பாதுகாப்பு செலவைக் குறைத்துக் கொண்டு ஏழைகள் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அஜ்மீர் தர்காவுக்கும் அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

பாகிஸ்தான் திரும்புதல்
கடந்த டிசம்பர் மாதம் திடீரென நாடு திரும்பிய காத்ரி, டிசம்பர் 23-ந் தேதி லாகூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியைக் கடுமையாக சாடி பேசினார். அவரால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை மீட்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார் காத்ரி.

காத்ரியின் கோரிக்கைகள்
அரபுநாடுகளின் உருவான புரட்சியின் போது முன்வைக்கப்பட்ட பொதுவான கோரிக்கை ஒன்று 'தேர்தல் சீர்திருத்தம்' என்பதுதான்! இதுதான் பாகிஸ்தானில் காத்ரியும் அவரது ஆதரவாளர்களும் முன்வைக்கக் கூடிய பிரதான கோரிக்கை. பயங்கரவாத தாக்குதல்களினால் ரத்தம் தோய்ந்த பூமியாகிக் கிடக்கும் பாகிஸ்தானியர்கள் காத்ரியின் சிந்தனைக்கும் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

ராணுவ ஆதரவு
காத்ரிக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு இருப்பதாக நம்பப்படுகிறது. பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் சூபியிச சிந்தனைகளை ஏற்கக் கூடியவர்களாக இருப்பதால் காத்ரிக்கான ஆதரவு பெருகியிருக்கிறது என்கின்றனர். வரும் மார்ச் அல்லது மே மாதத்தில் அந்நாட்டில் தேர்தல் நடைபெறக் கூடும் என்ற நிலையில் காத்ரியின் செல்வாக்கு காத்திரமானதாக இருக்குமா? என்பதுதான் முதன்மையான கேள்வியாக இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications