திருமலை ஏழுமலையான் கோவிலில் 11 டன் நகைகள்… கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

இந்தியாவிலேயே மிகவும் பணக்கார கடவுளான திருமலை வெங்கடேசப் பெருமாளைக் காண தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அங்குள்ள உண்டியலில் பணம், நகை, தங்கம், வெள்ளி போன்றவைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
திருமலை கோவிலுக்கு மட்டும் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள 11 டன் நகைகள் உள்ளன. இந்த நகைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல இந்த ஆண்டு நகைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று திருமலை துணை அதிகாரி சீனிவாசராஜூ முன்னிலையில் தொடங்கியது.
ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கப்பெற்ற நகைகள், பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகள் மற்றும் பாரம்பரிய நகைகள் ஆவணங்களில் உள்ளது போல் சரியாக உள்ளதா? என்பது குறித்து இந்த கணக்கெடுப்பு நடைபெறும்.
இந்த நகைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் குறிக்கப்பட்டு இருப்பதை வைத்து கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி அசோக்குமார், சீனிவாசராஜூ, கோவில் அதிகாரி சென்னங்காரி ரமணா, நகை கணக்குகள் அதிகாரி குருராஜாராவ், கோவில் அதிகாரி கோதண்டராமாராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications