பெற்றோரால் கட்சியில் நம்பர் 2 ஆன முதல் 'காந்தி' - ராகுல்தான்...!

காங்கிரஸ் கட்சியின் வரலாறு ஒன்னே கால் நூற்றாண்டாகும். வெள்ளையரால் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி இன்று நேரு- இந்திரா குடும்பத்தின் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இடை இடையே வேறு சில தலைவர்கள் வந்திருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி என்றால் அது நேரு- இந்திரா காந்தி குடும்பத்துக் கட்சியாகவே பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி பிறந்தது முதல் இதுவரை நடந்திராத ஒன்றாக ராகுல் காந்தியின் நியமனம் அமைந்துள்ளது. இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த யாருடைய வாரிசும், துணைத் தலைவராக அதாவது தலைவருக்கு அடுத்த நிலைத் தலைவராக நியமிக்கப்பட்டதில்லை. அந்த வகையில் சோனியா காந்தியின் தலைமையில், அவரது மகன் ராகுல் காந்தி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராகவும், இன்னொருவர் துணைத் தலைவராக மாறியிருப்பதும் இதுவே முதல் முறையாகும். அந்த வகையிலும் ராகுல் காந்தி சாதனை படைத்துள்ளார்.
நேரு தலைவராக இருந்தபோது இந்திரா காந்தியை தனது வாரிசாக அவர் முன்னிறுத்தியதில்லை. அதேபோல இந்திரா தலைவராக இருந்தபோதும் ராஜீவை அவர் முன்னிறுத்தியதில்லை. சஞ்சய் காந்தியைக் கூட அவர் பெரிதாக முன்னிறுத்தியதில்லை. அதேபோல ராஜீவ் காந்தி தலைவராக இருந்தபோதும் கூட சோனியாவை முன்னிறுத்தியதில்லை. போகும் இடமெல்லாம் கூட கூட்டிப் போனார், அவ்வளவுதான்.
ஆனால் தற்போது சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தியை துணைத் தலைவராக்கி தனக்கு அடுத்து இவர்தான் என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications