தமிழகம் முழுவதும் இலவச போலியோ சொட்டு மருந்து முகாம்

Subscribe to Oneindia Tamil

Polio drops
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று இலவச போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. இதற்காக கிட்டத்தட்ட 40,000 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பள்ளிகள், சமுதாய நலக் கூடங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் என்று பல்வேறு இடங்களில் இந்த சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இவை தவிர 771 நடமாடும் முகாம்களையும் தொலை தூர கிராம மக்களுக்காக அரசின் சுகாதாரத்துறை அமைத்திருந்தது.

சென்னையில் 1,306 போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து தரப்பட்டது. மேயர் சைதை துரைசாமி முகாம்களைத் தொடங்கி வைத்தார்.
செல்கின்றனர்.

5 வயதுக்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க இன்றைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 24ம் தேதி நடைபெறும்.

செங்கோட்டையில்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தமிழக கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் போலியோ சொட்டுமருந்து முகாமினை தொடங்கி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+