கள்ளக்காதலனுக்கு ஊட்டி விட கறிச்சோறுடன் வந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்த மனைவி
கும்பகோணம்: கள்ளக்காதலனுக்குப் பிடிக்குமே என்று கறி எடுத்து சமைத்து கறியும், சோறுமாக காதலனின் வீடு தேடி வந்தார் அவரது கள்ளக்காதலி. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அந்த கள்ளக்காதலியை அடித்துத் துவைத்து விட்டார். இதையடுத்து அவரது கணவர் தனது கள்ளக்காதலியுடன் சேர்நது மனைவியை அடித்தார்.
கும்பகோணம் அருகே உள்ள மாத்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு தையல்காரர். இவருக்கு 49 வயதாகிறது. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
ராஜேந்திரனின் அக்காள் மகள் ரேவதி. 29 வயதான இவருக்குத் திருமணமாகி விட்டது. ஆனால் கணவரைப் பிரிந்து வந்து விட்ட அவர் தனது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். இவரது வீடு ராஜேந்திரன் வீடு அருகே உள்ளது. ராஜேந்திரனுக்கும், ரேவதிக்கும் இடையே நாளடைவில் காதல் மலர்ந்துள்ளது. இது ஜெயந்திக்குத் தெரிய வர அவர் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்கள் இருவரும் உறவைத் தொடர்ந்துள்ளனர்.
இதையடுத்து போலீஸுக்குப் போனார் ஜெயந்தி. போலீஸாரும் அழைத்து இருவரையும் எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில், காணும் பொங்கல் அன்று தனது வீட்டில் கறிச்சோறு செய்தார் ரேவதி. பின்னர் அதை எடுத்துக் கொண்டு ராஜேந்திரன் வீட்டுக்கு வந்தார்.
தனது கையால் சாப்பாட்டை ராஜேந்திரனுக்கு ஊட்டி விட வந்தார் ரேவதி. அப்போது வீட்டில் ஜெயந்தி இருந்துள்ளார். ரேவதி கறியும், சோறுமாக தனது கணவரைப் பார்க்க வந்ததை அறிந்து அவர் கொதிப்படைந்தார். வீட்டில் கிடந்த விறகுக் கட்டையை எடுத்து ரேவதியை சரமாரியாகத் தாக்கினார். இதைப் பார்த்த ராஜேந்திரன் ஆத்திரமடைந்த இன்னொரு கட்டையை எடுத்து ஜெயந்தியைத் தாக்கியுள்ளார். அவருடன் ரேவதியும் சேர்ந்து ஜெயந்தியைத் தாக்கினார்.
இதில் ஜெயந்திக்குப் படுகாயம் ஏற்பட்டது. அவரது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை தஞ்சை பெரிய மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன், ரேவதியைக் கைது செய்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications