ராகுலிடம் அமர்ந்து சோனியா காந்தி அழுதபோது...!
ஜெய்ப்பூர்: எல்லோரும் எனக்குப் பதவி கிடைத்ததற்காகப் பாராட்டி மகிழ்கிறீர்கள். ஆனால் எனது தாயார் அதை நினைத்து எனது அருகே அமர்ந்து அழுதார். பதவி விஷம் என்பது அவருக்குத் தெரியும் என்று ராகுல் காந்தி பேசியபோது காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.
ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தின் 2வது நாள் இறுதியில் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். நேற்று நடந்த 3வது நாள் கூட்டத்தில் அவர் துணைத் தலைவராக உரையாற்றினார்.
ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க உணர்ச்சிகரமாக இருந்தது. குறிப்பாக தனது பாட்டி இந்திரா காந்தி குறித்தும், தாயார் சோனியா காந்தி குறித்தும் அவர் பேசியது உணர்ச்சிகரமாக இருந்தது.
ராகுலின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

அம்மாவுக்கு மகிழ்ச்சி இல்லை
நீங்கள் எல்லோரும் எனக்குப் பதவி கிடைத்ததற்காக மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எனது தாயார் மகிழவில்லை.

என்னிடம் வந்து அழுதார்
நேற்று எனது அறைக்கு வந்த எனது தாயார், என் அருகே அமர்ந்து அழுதார். அவர் அழுத்தது ஏன் தெரியுமா... பதவி என்பது விஷம். அதை நினைத்து அவர் அழுதார். ஆனால் எல்லோரும் இந்த விஷத்தைத்தானே தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் ராகுல்.

2 உயிர்களைக் கொடுத்த காந்தி குடும்பம்
சோனியா காந்தி அழுததற்கு என்ன காரணம் என்பதை விளக்கி் சொல்ல வேண்டியதில்லை. தனது மாமியார் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரை நினைத்தே அவர் அழுதிருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே..

பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட இந்திரா காந்தி
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தனது மெய்காப்பாளர்களான சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டு்க கொல்லப்பட்டார். அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவத்தை அனுப்பி தீவிரவாதிகளை அழித்ததற்காக இந்திரா காந்தி சுடப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தி
அதேபோல ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தபோது அங்கு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்த இரு உயிர்த் தியாகங்களையும் நினைத்தே ராகுலிடம் வந்து அழுதிருக்கிறார் சோனியா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications