என்னது பிரதமர் பதவிக்கு ராகுலுடன் மோடி போட்டியா? - நல்ல ஜோக்- திக்விஜய்சிங் கருத்து

2014பாரதிய ஜனதா கட்சியானது நரேந்திர மோடி தலைமையில் லோக்சபா தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தி தலைமையில்தான் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக நரேந்திர மோடியும் ராகுல் காந்தியும் இருப்பார்கள் என்றே கருதப்படுகிறது. ஆனால் இப்படியான ஒரு ஒப்பீட்டையே 'மிகப் பெரிய நகைச்சுவை' என்று வர்ணனை செய்கிறது காங்கிரஸ் கட்சி.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த காங்கிரசின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் யார் பிரதமர் என்பதை முன்கூட்டியே அறிவிக்கும் மரபு கிடையாது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள்தான் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் நாடாளுமன்ற ஜனநாயக மரபு. இதனால்தான் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் அறிவிப்பது இல்லை. ஊடகங்கள் குறிப்பிடுவது போல் மோடி- ராகுல் இடையே போட்டி என்பது மிகப் பெரிய ஜோக். 2014-ம் ஆண்டு தேர்தல் என்பது இரு கட்சிகளிடையேயான போட்டிதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளுமைமிக்க தலைவர்கள் காங்கிரஸில் இல்லை என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். இதே நிலைமைதான் குஜராத்திலும் இருக்கிறது என்றார் அவர்,
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications