கற்பழிப்பு முயற்சியில் தீ வைக்கப்பட்ட இளம்பெண் மரணம்

Subscribe to Oneindia Tamil

அலகாபாத்: உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரால் பலாத்காரம் செய்ய முயன்று, பின்னர் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்

அலகாபாத்தில் இருந்து 230 கி.மீ. தொலைவில் உள்ள ஷங்கர்ஹர் காவல் நிலையத்துக்குட்பட்ட ஜிக்னா கிராமத்தில் காய்கறி வியாபாரியின் மகளான 16 வயதுச் சிறுமியை, கடந்த ஜனவரி 6ம் தேதி இளைஞர் ஞான் சிங் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

இதனையடுத்து வெளியில் சென்ற அந்த காமுகன், பின்னர் வெளியில் ஓடிய அவர், தன் பெற்றோருடன் வந்து அந்தப் பெண்ணை தீயிட்டுக் கொளுத்தினார். அதில் அந்தச் சிறுமி பலத்த காயமடைந்தார். 70 சத தீக்காயங்களுடன் எஸ்.ஆர்.என் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அந்த இளம் பெண் உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து ஞான் சிங் மீதும் அவரது பெற்றோர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+