சென்னையை அதிர வைக்கும் கள்ள நோட்டு கும்பல்! தப்பியோடிய கும்பல் தலைவர் ரபீக்குக்கு போலீஸ் வலை!!
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பிடிபட்டு வருகின்றனர். இந்த கொள்ளைக் கும்பலின் தலைவனான ரபீக் சென்னை கொடுங்கையூரில் பதுங்கியிருந்த போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பி இருக்கிறான். அவனை போலீசர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தொடர் கைதுகள்
சென்னையில் கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்றதாக அப்துல் இஸ்மாயில், வசீம்ராஜா, அப்துல் முனாப் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சிக்கினர் அவர்களிடம் இருந்து ரூ. 5.03 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் ரூ.4800 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை கிழக்கு தாம்பரம் பரத்வாஜ் தெருவில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சுற்றித் திரிந்த ஒருவரை சேலையூர் போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபரின் பெயர் அப்துல்ஹமீது என்றும் மேற்கு வங்காள மாநிலம் முசிரிபாத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 24 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கள்ள நோட்டுகளை மாற்றுவதற்காக மேற்கு வங்காளத்தில் இருந்து அப்துல் ஹமீது உள்பட 5 பேர் ஒரு குழுவாக சென்னை வந்துள்ளனர். அவர்களில் 4 பேர் கிண்டியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களில் உஜ்மால் என்பவனை இன்று போலீசார் கைது செய்தனர். இவனும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவன். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
கும்பல் தலைவன் ரபீக்
பிடிபட்ட இந்த கள்ள நோட்டு கும்பல் தலைவனாக செயல்பட்டவன் பெயர் முமது ரபீக். இவன் கொடுங்கையூர் சிவசங்கரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தான். அவனை பிடிப்பதற்காக போலீசார் அங்கு சென்றனர். ஆனால் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டான். அவனது வீட்டில் கொல்கத்தா லாட்ஜூகளில் தங்கி இருந்ததற்கான ரசீதுகள் சிக்கியுள்ளன. போலீசின் பிடியில் இருந்து காயங்களுடன் தப்பிய ரபீக் விரைவில் போலீசில் சிக்குவான் என தெரிகிறது.
இந்த கள்ளநோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு வங்கதேசத்துக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு தீவிரவாத குழுக்கள் மூலம் இந்தியாவுக்குள் அவை புழக்கத்தில் விடப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் ரபீக்குக்கு தீவிரவாதிகளிடன் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
கள்ளநோட்டுக் கும்பல் தலைவன் ரபீக் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவரக் கூடும் என்று போலீசார் கூறுகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications