கனிவுடன் பரிசீலித்து, துணிவுடன் செயல்படுத்துங்கள்: ஜெ.வுக்கு வெள்ளையன் மனு
சென்னை: வால்மார்ட்டை தமிழகத்தில் இருந்து விரட்டுவது உள்ளிட்ட சில செயற்கரிய செயலைச் செய்து பெரும்புகழ் பெறுமாறு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
'நாட்டை அந்நியர்களின் கொடுங்கரங்களில் ஒப்படைத்துவிட்ட தேசத்துரோகம் அரங்கேற்றப்பட்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் தங்களிடம் சில கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறோம். (கனிவுடன் பரிசீலனை செய்து துணிவுடன் செயல்படுத்த வேண்டுகிறோம்).
சில்லறை வணிகம் மட்டுமின்றி மொத்த வணிகத்திலும் அந்நியர்களை அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் அந்நியக் கம்பெனிகளை வணிகம் செய்ய அனுமதிக்கக் கூடாது. வால்மார்ட்டை தமிழகத்தை விட்டு விரட்டியடிக்க வேண்டும் என்று தங்களிடம் வேண்டுகிறோம்.
அந்நியருக்கு உதவும் உள் நோக்கத்துடன், உள்நாட்டு வணிகர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடனும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 எனும் கொடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தை நிர்ணயிக்க போதுமான சட்டங்கள் மாநில அளவில் நடைமுறையில் உள்ளன. மத்திய அரசின் புதிய சட்டம் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்பதாலும் அந்நியருக்கு உதவும் உள்நோக்கம் கொண்டது என்பதாலும் தமிழகத்தில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தாங்கள் அறிவிக்க வேண்டுகிறோம்.
மின்சாரத் தட்டுப்பாட்டுக்கும், மின்வெட்டுக்கும் காரணமான மத்திய அரசின் நயவஞ்சகப் போக்கை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும். நெய்வேலி மின்சாரத்தையும், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தையும் முழுவதும் தமிழகத்திற்கே பயன்படுத்த வேண்டும். அந்நிய கம்பெனிகளுக்குத் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுவதைக் கைவிட வேண்டும். இப்படி பல வழிகளில் கிடைக்கப் பெறும் மின்சாரத்தை நகரங்கள், கிராமங்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டு வழங்க வேண்டுகிறோம்.
வெளிநாட்டு நச்சுப் பானங்களையும், பாக்கெட் பால் வகைகளையும் சோதனை செய்து அவற்றில் தரமில்லையேல் தமிழ்நாட்டில் அவற்றைத் தடை செய்து மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டிட வேண்டுகிறோம்.
தண்ணீரை விலையாக்கும் தேசிய நீர்க்கொள்கை-2012 என்கிற திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்று தாங்கள் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டுகிறோம்.
வணிகம், இன்ஸ்சூரன்ஸ், தகவல் தொடர்பு, வங்கிகள், விவசாயம், தொழில்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் அந்நியர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது, ஆன்லைன் வர்த்தக சூதாட்டம், சேவை வரி மற்றும் மதிப்புக் கூடுதல் வரி போன்ற வரித்தாக்குதல்கள், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, தவறான ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கைகள் இவையே விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணங்கள். இவற்றை எதிர்த்து முறியடிக்கத் தாங்கள் முயற்சிக்க வேண்டுகிறோம்.
மத்திய அரசின் அந்நிய சார்புக் கொள்கைக்குக் காரணமான உலக வர்த்தக ஒப்பந்தத்தை முறியடிப்பதுதான் இறுதி தீர்வாக இருக்க முடியும். எனவே டபிள்யூ.டி.ஓ. ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியே வர தாங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறோம்.
உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பிறகு ஒவ்வொரு துறையாக அந்நியர் ஆதிக்கம் ஏற்பட வழி வகுத்த மத்திய ஆட்சியாளர்கள் இறுதியாக வணிகத் துறையையும் அந்நியரின் வஞ்சக வலையில் வீழ்த்தி இருப்பது தேசத்துரோகத்தின் உச்சக்கட்டம் ஆகும்.
இந்தத் தேசத்துரோகத்தையும், அதற்கு காரணமான உலக வர்த்தக ஒப்பந்தத்தையும் முறியடிப்பது தான் சுதந்திரத்தைக் காக்கும் செயல். இந்த செயற்கரிய செயலைச் செய்து பெரும்புகழ் பெற தங்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications