பாலியல் வழக்குகளை பெண் நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும்: நீதிபதி வர்மா குழு பரிந்துரை

டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். இதையடுத்து பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது தொடர்பாக நாட்டிலுள்ள குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைப் பரிந்துரைக்க முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்த குழு தனது ஆய்வை முடித்து அறிக்கையை இன்று உள்துறை அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள்:
- காவல் நிலையத்தில் 25 சதவீதம் பெண் போலீசாரை நியமிக்க வேண்டும்.
- சிறாருக்கான உச்ச வயது வரம்பை 18ல் இருந்து 16க குறைக்க வேண்டும்.
- பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை அனுபவிப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது.
- பாலியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்படுபவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.
- பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்கள் தேவையில்லை நல்ல நிர்வாகம் தான் தேவை.
- பெண்களை பாதுகாக்க முடியாமல் போனால் போலீசார் குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்க வேண்டும்.
- பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை பெண் நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீதிபதி வர்மா கூறுகையில்,
பெண்களின் பாதுகாப்பு குறித்த பரிந்துரைகள் நம் நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்தும் வந்தது. ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீதிபதி மற்றும் கனடா நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரும் பரிந்துரைகள் அளித்தவர்களில் அடக்கம்.
இந்த அறிக்கையை 29 நாட்களில் முடித்துவிட்டோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கிட்டத்தட்ட 80,000 பேர் பரிந்துரைகள் வழங்கினர். ஒரு மாதத்தில் எங்களால் செய்ய முடிந்ததை அரசு தனது அதிகாரத்தை வைத்து அதில் பாதி அளவு நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க அரசின் நல்லாட்சியின்மையே காரணம். நாங்கள் அளித்துள்ள பரிந்துரைகளை வைத்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்ட திருத்தம் செய்யப்படும் என்று நினைக்கிறோம்.
பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் அரிய வழக்குகளில் தூக்கு தண்டனையும் அளிக்க வேண்டும் என்று இந்த குழுவிடம் காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications