கோவாவில் விசாரிக்கும் சாக்கில் பெண்ணை மானபங்கப்படுத்திய போலீஸ்காரர்
பனாஜி: கோவாவில் விசாரணை என்ற பெயரில் பெண்ணை மானபங்கப்படுத்திய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள மபுசா நகரைச் சேர்ந்தவர் கான்ஸ்டபிள் பிரஷாந்த் தவாஸ்கர்(30). அவர் மீது 6 வயது பெண் குழந்தையின் தாய் மபுசா போலீசில் புகார் கொடுத்தார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
என் கணவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த தவாஸ்கர் உள்பட 5 போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எங்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது எனது கணவர் வீட்டில் இல்லை. நானும் எனது 6 வயது மகளும் மட்டும் தான் இருந்தோம். தவாஸ்கர் விசாரணை நடத்துகிறேன் என்ற பெயரில் என் உடல் முழுவதும் பரிசோதனை செய்கிறேன் என்று என்னை மானபங்கப்படுத்திவிட்டார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தவாஸ்கரை நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.பி. விஷ்ரம் போர்கர் கூறுகையில்,
தவாஸ்கரை கைது செய்து, சஸ்பெண்ட் செய்துள்ளோம். அந்த பெண் மீது எந்த புகாரும் இல்லாமல் அவராக விசாரணை நடத்தியுள்ளார் என்றார்.
தனது கணவர் போலீசாருக்கு பணம் தர வேண்டும் என்று கூறி அந்த 5 பேரும் நள்ளிரவில் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications