ராஜினாமா செய்யத் தயாராக 15 எதியூரப்பா எம்எல்ஏக்கள்.. 2 அமைச்சர்கள் விலகல்!

பொதுப்பணித்துறை அமைச்சர் உதாசி, மின்துறை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே ஆகியோ தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் வழங்கினர்.
மேலும் இந்தக் கடிதத்தின் நகல்களை ஆளுநர் பரத்வாஜுக்கும் அவர்கள் அனுப்பி வைத்தனர்.
இவர்கள் தவிர மேலும் 15 எதியூரப்பா ஆதரவு பாஜக எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், இவர்களிடம் இருந்து ராஜினாமா கடிதம் பெறுவதைத் தவிர்த்து அரசைக் காப்பாற்றுவதற்காக சபாநாயகர் போபையா திடீரென நேற்றிரவு நேபாளம் டூர் போய்விட்டது குறிப்பிடத்தக்ககது.
ஆனால், இதையும் மீறி நேரடியாக கவர்னருக்கே ராஜினாமா கடிதத்தை அனுப்ப எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே எதியூரப்பா உள்பட 7 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இப்போது மேலும் எம்.எல்.ஏக்கள் விலகும் பட்சத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 2008ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தது. இதன் மூலம் தென் மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால் 4 ஆண்டுகளில் எதியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என 3 முதல்வர்கள் மாற்றப்பட்டனர். கர்நாடக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே மாதம் முடிவடைகிறது.
இந் நிலையில் இந்த அரசும் கவிழும் நிலை உருவாகி உள்ளது.
இதையெல்லாம் மீறியும் வரும் பிப்ரவரி 8ம் தேதி நான் பட்ஜெட் தாக்கல் செய்தே தீருவேன் என்கிறார் முதல்வர் ஷெட்டார். அதற்குள் அரசைக் கவிழ்க்க எதியூரப்பா முயன்று வருகிறார்.
-
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications