மணமேடைக்கு வர மறுத்த மணமகள், வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன்
விழுப்புரம்: விழுப்புரத்தில் மணமேடைக்கு அழைத்துச் செல்லும்போது மணமகள் திருமணம் வேண்டாம் என்று அடம்பிடித்ததால் மணமகன் வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள வி. தெற்குணத்தைச் சேர்ந்தவர் விமல் அழகன் (27). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்கும் விழுப்புரம் அருகே உள்ள அய்யன்கோவில்பட்டைச் சேர்ந்த சேட்டு என்பவரின் மகள் புவனாவுக்கும் (21) பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கண்டமங்கலம் அருகே உள்ள பிடாரிபட்டுவில் உள்ள தீர்க்க சுமங்கலி திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. நேற்று மாலையே மணமகன் மற்றும் மணமகள் உறவினர் சகிதமாக திருமண மண்டபத்திற்கு வந்து தங்கினர். இன்று காலை புவனாவை அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்துச் செல்லும்போது அவர் வர மறுத்தார். ஏன் என்று கேட்டதற்கு தனக்கு திருமணம் வேண்டாம் என்றார். அதற்கான காரணத்தை சொல்ல அவர் மறுத்தார்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து மணமகளை சமாதானம் செய்ய முயன்றும் பலனில்லை. புவனாவின் வார்த்தைகளைக் கேட்டு ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு கேட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது, திருமணமும் நின்று போனது.
பின்னர் அதே மேடையில் பானாம்பட்டுவைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண்ணுக்கும் விமலுக்கும் திருமணம் நடந்தது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications