லஞ்ச விவகாரம்: 3 தமிழக கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் 8 பல் மருத்துவ கல்லூரிகளில் சிபிஐ சோதனை

சென்னை அருகே மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் முதுநிலை டெண்டல் பாடப்பிரிவை துவங்க கடந்த 2012ல் இந்திய பல் மருத்துவ கவுன்சி லுக்கு கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்தது. இதையடுத்து, அந்த பல் மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு அனுமதி வழங்க ரூ.1 கோடி தர வேண்டும் என்று இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர் முருகேசன் கேட்டுள்ளார். இதற்கு கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த ராமபத்திரன் உடன்பட்டுள்ளார்.
ஜனவரி 7ம் தேதி ராயப்பேட்டை மருத்துவமனையில் வைத்து ராமபத்திரன் ரூ.25 லட்சத்தை முருகேசனிடம் கொடுக்கும்போது சிபிஐ அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த கருணாநிதி, ஆற்காடு தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழனி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ காவலில் உள்ள டாக்டர் முருகேசனிடம் நடத்திய விசாரணையில் தமிழ்நாடு பல் மருத்துவக் கவுன்சில் தலைவர் மற்றும் அகில இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் மற்றொரு உறுப்பினருமான டாக்டர் குணசீலனுக்கும் தொடர்புள்ளது தெரியவந்தது. இதையடுத்து, குணசீலன் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் முக்கிய ஆவணங்களையும் ரூ.75 லட்சம் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றினர். குணசீலனிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதையடுத்து டாக்டர் குணசீலன், டாக்டர் முருகேசன் ஆகியோரின் அகில இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர் பதவிகளை தமிழக அரசு பறித்தது.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள பல் மருத்துவக்கல்லூரி நிர்வாக இயக்குனர் ஸ்ரீலேகா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திங்கட்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அடையாறு கஸ்தூரிபா நகர், 2வது தெரு பக்தவச்சலம் நகர் அண்ணா அவென்யூவில் உள்ள அவரது வீட்டில் 6 சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழுவினர் சுமார் 6 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் இன்று தமிழகத்தில் 3 பல் மருத்துவ கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 8 பல் மருத்துவ கல்லூரிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications