பிப்.1ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்: ஆளுநர் ரோசய்யா உரை

இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் பிப்ரவரி 1-ம் தேதி காலை சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்துகிறார். இதற்காக சென்னை கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்துக்கு வரும் ஆளுநரை சபாநாயகர் தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்து செல்கின்றனர்.
காலை 10 மணிக்கு ஆளுநர் ரோசய்யா கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். ஆளுநர் உரையில் அரசின் செயல்பாடுகள், புதிய திட்டங்கள் குறித்த அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். அதைத் தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் வாசிப்பார். அத்துடன் கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
பின்னர் சபாநாயகர் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவு செய்யும். இந்த கூட்டத் தொடர் ஒரு வாரம் நடக்கும் என தெரிகிறது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும். அதற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசுவார். இதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும். பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என கூறப்படுகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications