கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள்
நெல்லை: நெல்லை மாவட்ட விவசாயிகள் டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி விவசாயம் செய்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட காலத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யாமல் பொய்த்ததால் பல பகுதிகளில் குளங்கள், ஆறுகள், ஏரிகள் தண்ணீர் இன்றி காணப்படுகின்றன. இதனால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்த விவசாயிகள் பருவம் ஏதும் செய்யாமல் இருந்தனர். நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, புளியரை, பண்பொழி, குற்றாலம், பணகுடி மற்றும் ரோஸ்மியாபுரம் பகுதிகளில் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் நெல் பயிர்கள் பயிரிட்டிருந்தனர். ஆனால் பம்ப் செட் கிணற்றில் உள்ள நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வந்ததால் விவசாயிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
விவசாயிகள் நீண்ட கால பயிர்களான வாழைப் பயிரை காப்பாற்றுவதற்காக குறுகிய கால பயிரான நெல்லிற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆகையால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் சூழ்நிலை ஏற்பட்டது. பம்ப் செட் கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லாததால் பல ஏக்கர் பரப்பு நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகின. ஒரு சில விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்ற சில கி.மீ. தொலைவில் உள்ள வேறு பம்ப் செட் கிணற்றிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி டேங்கர் லாரிகள் மூலம் தங்கள் வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். நெற் கதிர்கள் வந்த நிலையில் அவற்றை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு டேங்கர் லாரி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு ஏக்கருக்கு 6 டேங்கர் லாரி தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் ஒரு டேங்கர் லாரி தண்ணீர் கொண்டுவர ரூ. 1,000 செலவாகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ. 6,000 வீதம் தண்ணீருக்காக விவசாயிகள் செலவிடுகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
நெற்பயிரை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகிறோம். வீட்டு தேவைக்கு வேண்டுமென்ற நோக்கில் அதிகளவில் பணம் செலவு செய்து நெற்பயிரை காப்பாற்றுகிறோம். கருகிய பயிர்களுக்கும், கஷ்டப்பட்டு காப்பாற்றி வரும் பயிர்களுக்கும் அரசு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.
புளியரை பகுதியில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகியுள்ளது. மேலும் பல நூறு ஏக்கர் நெற்பயிர்களை மழை பெய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் சூழலும் உள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications