சி.ஏ. தேர்வில் முதலிடம் பிடித்த பிரேமாவுக்கு முதலில் கருணாநிதி ரூ.1 லட்சம், அடுத்து வாசன் ரூ. 5 லட்சம்

Subscribe to Oneindia Tamil

Prema Jayakumar and Karunanidhi
சென்னை: அகில இந்திய சி.ஏ. தேர்வில் முதல் மாணவியாகத் தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் பிரேமாவுக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அம்மாணவிக்கு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மும்பை, மலாட் எஸ்.பி. கான் சால் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் பெருமாள் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள பெரிய கொல்லியூரைச் சேர்ந்தவர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக மும்பையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் பிரேமா, சமீபத்தில் நடந்த சி.ஏ. தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.

இவரது சாதனையை பாராட்டி திமுக அறக்கட்டளை சார்பில் மாணவி பிரேமாவுக்கு ரூ.1 லட்சம் தொகை வழங்கப்படுகிறது என தலைவர் கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பிரேமாவுக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜெயக்குமாரிடம் போனில் பேசிய வாசன் பிரேமாவை வாழ்த்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+