நெல்லை, தூத்துக்குடி 'பலே' கொள்ளையர்கள் 6 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெண்களிடம் தங்கச் செயின்களை பறித்த 2 கொள்ளையர்கள், ஆந்திராவில் கைவரிசை காட்டிய கொள்ளையன் உட்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 33 பவுன் தங்க நகைகள், பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களை மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்து மிரட்டி தங்க நகைகளை பறித்து செல்பவர்களை கைது செய்ய எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி. மகேந்திரன் மேற்பார்வையில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, திசையன்விளை இன்ஸ்பெக்டர் முருகன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிஹரன், சிவசுப்பு, ஆடிவேல் உள்ளிட்ட தனிப்படையினர் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர்.

திருச்செந்தூர்-வள்ளியூர் ரோட்டில் கள்ளிகுளம் விலக்கில் நேற்று காலை மோட்டார்பைக்கில் வந்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற கார்த்திக்(22), மலையாண்டி(22) என தெரிய வந்தது. இருவருக்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த செயின்பறிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கடந்த 20ம் தேதி திசையன்விளை வேதக்கோயில் அருகே நடந்து சென்ற சுகிர்தமணியிடம் 9 பவுன் தங்கச்செயின் பறிக்கப்பட்ட சம்பவம், 19ம் தேதி மன்னார்புரம் விலக்கு அருகே நடந்து சென்ற சிலுவை மேரியிடம் 15 பவுன் எடையுள்ள 2 தங்கச்செயின்கள் பறிக்கப்பட்டது, 2011ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி தாழையூத்து அருகே சைக்கிளில் சென்ற அனிதாமேரியிடம் 2.5 பவுன் செயின் பறிக்கப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகஜோதியிடம் 6 பவுன் தங்கச்செயின் பறிக்கப்பட்ட சம்பவங்களில் இருவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 33 பவுன் தங்க நகைகள், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி பகழிக்கூத்தர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். அவர் தன் சகோதரி வசிக்கும் வீரவநல்லூருக்கு சென்றுவிட்டு 21ம் தேதி இரவு கறம்பை பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் அவரை தாக்கி ஆயிரம் ரூபாயை பறித்தனர். இது குறித்து கணேசன் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் விசாரணை நடத்தினார். காரில் வந்து பணம் பறித்தவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் கோவை உக்கடத்தைச் சேர்ந்த ஹரிதாஸ்(25), பக்ருதீன்(29), ரியாஸ்(21), முகமது ரியாஸ் என தெரிய வந்தது. ஹரிதாஸிற்கு 2011ம் ஆண்டு நாகர்கோவில் அருகே பொறியியல் கல்லூரி ஏ.டி.எம்.மில் 2 காவலாளிகளை கொலை செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, ஆலங்குளம், முக்கூடல், பத்தமடை, முன்னீர்பள்ளம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை வழக்குகளில் தொடர்புள்ளது தெரிய வந்தது. ஆந்திராவில் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு 10 நாட்களுக்கு முன் வெளியே வந்த ஹரிதாஸ் தன் கூட்டாளிகளுடன் பல இடங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.

அவர்கள் கடந்த 18ம் தேதி கன்னியாகுமரியில் தங்கினர். மறுநாள் அதாவது 19ம் தேதி அவர்கள் வள்ளியூர் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடியதும், சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரி பஸ் ஸ்டாப் அருகே ஒரு வீட்டில் பூட்டை உடைத்து பொருட்களை திருடியதும் தெரிய வந்தது. அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டிருந்த சூழ்நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பக்ருதீன் மீது கோவை மாவட்டம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள் உள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 1,000, கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+