ரயில் சாப்பாடு பிடிக்கலையா? புகார் கொடுக்க போன் நம்பர் இருக்கு
டெல்லி: ரயிலில் வழங்கப்படும் உணவு குறித்து ஏதாவது புகார் செய்ய வேண்டும் என்றால் 1800111321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். ரயில்வே துறை அமைத்துள்ள இந்த புகார் சேவை வாரம் முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி முதல் இயங்கும்.
இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் கூறுகையில்,
ரயிலில் வழங்கப்படும் உணவு குறித்து புகார் செய்ய விரும்புவோர் 1800111321 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அவர்களின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் உணவுக்கு அதிக பணம் வசூலிப்பது, குறைவான அளவு அல்லது தரமின்மை உள்ளிட்ட எது குறித்து வேண்டுமானாலும் புகார் செய்யலாம். இந்த எண் ஜனவரி 18ம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. வரும் 26ம் தேதி வரை புகார்கள் பெறப்படும்.
ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள உணவு வழங்கும் கான்டிராக்டர்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புகார் கொடுக்க இப்படி ஒரு எண் இருக்கிறது என்பதை பயணிகளுக்கு தெரியப்படுத்த இந்த எண்ணை ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் ஒட்டிவைக்கப்படும்.
ரயிலில் வழங்கப்படும் தயிரின் தரம் சரியில்லை. அதனால் இனிமேல் நல்ல பெயர் எடுத்துள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் தயிரை மட்டுமே வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் மெனுவை மேம்படுத்த உள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications