பாமக – அதிமுக மோதல்: கடலூரில் பதற்றம்… போலீஸ் குவிப்பு
கடலூர்: கடலூரில் பாமக - அதிமுக தொழிற்சங்க பேரவையினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு கடலூரில் நுழைய தடை விதித்ததை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் பாமக தொண்டர்கள் முயற்சி மேற்கொண்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து பா.ம.க தொண்டர்களுக்கும் போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்க முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ம.க.,வினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
பா.ம.க.,வினர் போலீஸ் மோதலில், அருகில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த அதிமுக தொழிற்சங்க பேரவையினர் மீதும் தாக்குதல் நடந்தது. தாக்குதலை தொடர்ந்து பா.ம.க.,வினர் மீது அதிமுக தொழிற்சங்க பேரவையினரும் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் மேலும் அதிகரித்தது.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை நிறுத்த போலீசார் மீண்டும் தடியடி நடத்தினர். இதனைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் கடலூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications