விஸ்வரூபம் படத்தைத் தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு
டெல்லி: விஸ்வரூபம் படத்தைத் தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
டெல்லியில் இதுதொடர்பாக மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ்திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
படங்களை வெளியிட அனுமதி அளிப்பது தொடர்பான விஷயத்தில், தணிக்கைக்குழுவின் கருத்து மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தும் என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே இயக்குநர் பிரகாஷ் ஜா வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.
ஒரு படத்தை தடை செய்வது என்பது மாநில அரசின் அதிகார வரம்பில் வரவில்லை. குறிப்பாக தணிக்கைக்குழு அனுமதி அளித்த பிறகு, ஒரு படத்தை தடை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.
அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவு 246, ஏழாவது அட்டவணை, பட்டியல் ஒன்று, பதிவு 1, சினிமா படங்களை திரையிடுவதற்கு சான்றிதழ் அளிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. எனவே ஒரு முறை மத்திய தணிக்கைக்குழு, படத்தை திரையிட அனுமதி அளித்த பிறகு, பிற அனைத்தையும் அது கட்டுப்படுத்தும்.
பிரகாஷ் ஜா வழக்கில், திரைப்பட காட்சி சட்டத்தின் அனைத்து வழிவகைகளையும் சுப்ரீம் கோர்ட் ஆராய்ந்தது. இந்த (தணிக்கைக்குழுவின்) அதிகாரத்தை, அரசியல் சாசனச்சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள சட்டம்-ஒழுங்கு அதிகாரத்துக்கு எதிர் நிலையில் வைத்துள்ளது.
எனவே, தமிழக அரசு இதில் ஒரு முடிவு எடுக்கும் முன்பாக, பிரகாஷ் ஜா வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பை மிகக் கவனமாக ஆராய வேண்டும். ஏனெனில், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக அது மோதுகிற வகையில் அமைந்துவிடக்கூடாது என்றார்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கடன் சுமை டூ வங்கி இருப்பு! 12 வருடத்தில் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றிய கிசான் சம்ரித்தி திட்டம் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications