திருச்செந்தூருக்கு சென்ற முருக பக்தர் ஓட ஓட வெட்டிக் கொலை, தூத்துக்குடியில் 2 பேர் கொலை
நெல்லை: மாலை அணிந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரை சென்ற முருக பக்தர் நெல்லை அருகே ஓட, ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(32). தைப்பூசத்தை முன்னிட்டு அவர் முருகப் பெருமானுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் 30 பேருடன் சேர்ந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரை கிளம்பினார். நள்ளிரவு 1 மணிக்கு முன்னீர்பள்ளம்-பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவிலில் தங்கி ஓய்வு எடுத்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து செல்ராஜை தாக்கியது.
இதையடுத்து அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து அவருடன் வந்திருந்த முருக பக்தர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக வாகைக்குளத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 2 பேர் கொல்லப்பட்டனர். அந்த பிரச்சனை தொடர்பான முன்விரோதத்தால் தான் செல்வராஜும் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதுதவிர தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கால்வாய் பகுதியைச் சேர்ந்த பட்டமுத்து மற்றும் சண்முகம் ஆகியோர் மோட்டார் திருட்டு தொடர்பான முன்விரோதம் காரணமாக இன்று காலை 10 மணியளவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications